Header Ads

test

யாழ்.மாவட்ட செயலகம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்ட முன்பள்ளி ஆசிரியர்கள்.

 வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த முன்பள்ளி ஆசிரியர்கள் யாழ்.மாவட்ட செயலகம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்தனர்.

தமக்கு வழங்கப்படும் 6,000 ரூபா கொடுப்பனவை அதிகரிக்க கோரியும், தமக்கு நிரந்தர நியமனம் வழங்கக் கோரியும், நீண்ட காலமாக தாம் குறைந்த சம்பளத்துடன் சேவையாற்று வருவதாகவும் தமக்கு இந்த அரசாங்கம் உரிய தீர்வைப் பெற்றுத்தர வேண்டும் என அவர்களது கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதனடிப்படையில் வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த அனைத்து முன்பள்ளி ஆசிரியர்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.





No comments