Header Ads

test

சுதந்திர தினத்தை முன்னிட்டு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினர் முன்னெடுக்கவுள்ள மாபெரும் போராட்டம்.

 இலங்கையின் சுதந்திர தினமான  எதிர்வரும் நான்காம் திகதி,  காலை 10 மணியளவில் முள்ளிவாய்க்கால் முற்றத்தில் வடகிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினர் மற்றும் வடகிழக்கு சிவில் சமூகங்களின் ஏற்பாட்டில் மாபெரும் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது.

  குறித்த போராட்டத்தில் இளைஞர் யுவதிகள், பல்கலைகழக மாணவர்கள், பொதுமக்கள், வர்த்தகர்கள், தனியார் பேருந்து சங்கங்கள், தமிழ்த்தேசியத்தின் பால் செயற்பட்டு வருகின்ற கட்சிகள், மதகுருமார்கள் என அனைத்து உறவுகளும் கலந்து கொண்டு   ஆதரவினை வழங்குமாறு  வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள்  அழைப்பு விடுத்துள்ளனர்.

இது குறித்து மேலும் தெரியவருகையில், 

தமிழினத்திற்கான சுதந்திரம் கிடைக்காத நிலையிலேயே நாம் இதுவரை போராடி கொண்டிருக்கின்றோம். நாம் எமது உரிமையை இழந்திருக்கின்றோம், உறவுகளை இழந்திருக்கின்றோம்.

எனினும் உணர்வுகளை இழக்ககூடாது. தமிழனாக பிறந்த ஒவ்வொருவருக்கும் இது தலயாய கடமை என்பதை புரிந்துகொண்டு குறித்த போராட்டத்தில் ஒன்றிணைந்து கலந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கின்றோம்.

நாம் அனைவரும் ஒருமித்து குரல் கொடுத்தாலேயே எமது உரிமையையும் சுதந்திரத்தையும் பெற்றுக்கொள்ள முடியும். மேலும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளிற்கு உளரீதியான ஆலோசனைகளை வழங்க தயாராக இருப்பதாக நீதி அமைச்சர் அண்மையில் தெரிவித்தார்.

ஆனால் நாங்கள் நன்றாகத்தான் இருக்கிறோம் எமக்கு மன உளைச்சல் இல்லை. எமது உறவுகள் கிடைக்கும் வரை நாம் சோர்ந்துபோய் ஒடுங்கிவிடமாட்டோம் என தெரிவித்த அவர்கள்,  எமது உறவுகளை கொச்சைப்படுத்த வேண்டாம் என்று அவரிடம் கேட்டுக்கொள்கிறோம் என கூறியுள்ளனர்.

மேலும்  எமக்கான நீதி கிடைக்கும் வரை நாம் உறுதியாக நின்று போராடுவோம் என்றும்தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


No comments