Header Ads

test

முன்னாள் பிரதேச செயலாளர் க.பரந்தாமன் அவர்களுக்கான இரங்கல் நிகழ்வை முன்னெடுத்த புரட்சி விளையாட்டுக் கழகம்.

 வவுனியா வடக்கு முன்னாள் பிரதேச செயலாளர் க.பரந்தாமன் அவர்களுக்கான இரங்கல் நிகழ்வு புளியங்குளம் புரட்சி விளையாட்டு கழக மைதானத்தில் இன்று (27) இடம்பெற்றது.

குறித்த நிகழ்வு பற்றி தெரிய வருகையில்,

வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் பிரிவில் 17 வருடங்கள் தொடர்ச்சியாக கடமை புரிந்ததுடன் யுத்த சூழலுக்குள்ளும் மக்களுக்கான சேவையை மனம் தளராது ஆற்றிய பெருமகனை இழக்க நேரிட்டுள்ளது.

கொவிட் தொற்றுக்காலத்திலும் தான் சேவையாற்றிய பிதேச மக்களுக்காக  உலர் உணவுகளை வழங்கியதுடன் இவர் சிறந்த படைப்பாளியாகவும் கலைஞானகவும் வரலாற்றில் தனக்கென ஒரு தனி இடத்தை பொறித்துள்ளார்.

அது மட்டுமல்லாமல் கல்வி,விளையாட்டு,விவசாயம் போன்ற துறைகளையும் ஊக்குவித்துள்ளார். 

இந் நிலையில் குறித்த  பிரதேச செயலாளர் நோய்த் தாக்கம் காரணமாக கடந்த 16ம் திகதி உயிர் நீத்தார்.

குறித்த பிரதேச செயலாளரின் சேவையை மதிப்பளிக்கும் வகையில் அஞ்சலி நிகழ்வை,

இன்று புளியங்குளம் புரட்சி விளையாட்டுக்கழகம் மிகச் சிறப்பாக முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந் நிகழ்வில் அன்னாரின் பிள்ளைகள் மற்றும் உறவினர்கள் கலந்துகொண்டதோடு கிராம சேவையாளர்கள்,சமூக சேவை செயற்பாட்டாளர்கள்,பல் துறைசார் உத்தியோகத்தர்கள் மற்றும் கிராம வாசிகள் என பலரும் கலந்துகொண்டனர்.

அமரர் க.பரந்தாமன் அவர்களின் பிள்ளைகளால் தந்தையின்  ஞாபகார்த்தமாக புரட்சி விளையாட்டுக்கழக மைதானத்தில் மரம் ஒன்றும் நாட்டப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

புரட்சி விளையாட்டுக்கழகமானது வவுனியா வடக்கில் முன்மாதிரியான  விளையாட்டுக்கழகமாக திகழ்வதோடு பல சமூக சேவைகளையும் கழகத்தின் இளைஞர்களால் ஆற்றப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.



















No comments