Header Ads

test

முல்லை குருந்தூர் மலைக்கு திடீர் விஜயம் மேற்கொண்ட தமிழ்த் தேசிய கூட்டமைப்பு.

 முல்லைத்தீவு - தண்ணிமுறிப்பு குருந்தூர் மலைக்கு இன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் விஜயம் ஒன்றினை மேற்கொண்டிருந்தனர். இதன்போது அவர்கள் குருந்தூர் மலையில் நீதிமன்ற கட்டளைக்கு முரணாக கட்டப்படுகின்ற கட்டடங்களை பார்வையிட்டனர்.

அத்துடன் , அங்கு ஆதி ஐயனார் திரிசூலம் இருந்தஇடத்தில் வழிபாடுகளும் மேற்கொள்ளப்பட்டன.

இந்த விஜயத்தில் தமிழ்தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், சிவஞானம் சிறீதரன், சாணக்கியன் ராசமாணிக்கம், வடமாகாணசபை முன்னாள் உறுப்பினர்களான துரைராசா ரவிகரன், எம்.கே.சிவாஜிலிங்கம், பச்சிலைப்பள்ளி பிரதேசசபை தவிசாளர் சுரேன், கரைச்சி பிரதேசசபை உறுப்பினர் ஜீவன், கரைதுறைப்பற்று பிரதேசசபை உறுப்பினர் சி.லோகேஸ்வரன், இலங்கைத்தமிழரசுக்கட்சியின் இளைஞர் அணி தலைவர் கி.செயோன் ஆகியோருடன் பொதுமக்களும் கலந்துகொண்டிருந்தனர்.

அதேவேளை இலங்கையின் 74 ஆவது சுதந்திரதினமான இன்று குருந்தூர் மலைக்கு செல்லவிருப்பதாக நேற்றையதினமே கூட்டமைப்பினர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.





No comments