வவுனியாவில் திடீரென தீப்பற்றி எரிந்த பழக்கடை.
வவுனியாவில் திடீரென பழங்கடை ஒன்று தீப்பற்றி எரிந்து நாசமாகியுள்ளது.
இன்று இரவு 9.30 மணியளவில் இடம்பெற்ற இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,
வவுனியா, குருமன்காடு சாந்தி கிளினிக் அருகாமையில் உள்ள பழக்கடை ஒன்றை அதன் உரிமையாளர் வியாபாரம் முடிந்து வீடு சென்ற சிறிது நேரத்தில் குறித்த பழ வியாபார நிலையத்தில் தீ பிடித்து எரிந்துள்ளது.
பழ வியாபார நிலையம் தீ பிடித்து எரிவதை அவதானித்த அயலவர்கள் வவுனியா நகரசபை தீயணைப்பு பிரிவினர் மற்றும் பொலிசாருக்கு தகவல் வழங்கியதுடன், வியாபார நிலைய உரிமையாளருக்கும் தெரியப்படுத்தியுள்ளனர்.
வவுனியா நகரசபை தீயணைப்பு பிரிவினர் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு தீயை கட்டுக்குள் கொண்டு வந்த போதும் பழ வியாபார நிலையம் முழுமையாக எரிந்து நாசமாகியுள்ளதுடன், பழங்களும் தீயில் கருகியுள்ளன.
சம்பவம் தொடர்பில் வவுனியா பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
Post a Comment