Header Ads

test

யாழில் பெரும் சோகத்தை ஏற்படுத்திய சம்பவம்.

யாழ்ப்பாணம் ஆரியகுளம் பகுதியில் இன்று அதிகாலை நிறுத்தப்பட்டிருந்த மினி பஸ் மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் இளஞர் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.

விபத்தில் மன்னார் மாவட்டத்தில் அரச நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வரும் குறித்த இளைஞர் தனது பணி நிமிர்ந்தம் சென்ற சமயம் குறித்த விபத்து சம்பவம் இடம் பெற்றுள்ளது.

வீதியில் நின்ற வாகனத்துடன் மோட்டார் சைக்கிள் மோதியதில் இந்த விபத்து இடம் பெற்றுள்ளது.

சம்பவத்தில் அல்வாய் தெற்கைச் சேர்ந்த இந்திரசிங்கம் நிருபன் வயது 32 என்ற இளைஞரே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில் விபத்து தொடர்பாக யாழ்ப்பாண பொலிஸார் விசாரணைகளை மேற் கொண்டு வரும் நிலையில் குறித்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


No comments