பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள இரு பிள்ளைகளின் தயாரின் மரணம்.
புத்தளம் பிரதான வீதியின் இடம் பெற்ற விபத்து ஒன்றில் வயோதிப பெண் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்பவம் நேற்று புதன்கிழமை (09-02-2022) முந்தல் - அங்குனவில அக்கரவெளி கறுப்பு பாலத்திற்கு அருகில் இடம்பெற்றுள்ளது.
மேலும் இந்த விபத்தில் முந்தல் – அங்குனவில அக்கரவெளிப் பகுதியைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தாயான 53 வயதுடைய வயோதிப பெண் ஒருவரே உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்து குறித்து தெரியவருவது, ஆண்டிகம பகுதியை நோக்கிச் சென்ற துவிச்சகக்ர வண்டியுடன், எதிர்த் திசையில் பயணித்த லொறியொன்று மோதியதில் இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்த வயோதிப பெண்ணின் சடலம் முந்தல் மாவட்ட வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. விபத்துடன் தொடர்புடைய லொறியின் சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இச் சம்பவம் தொடர்பில் முந்தல் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Post a Comment