Header Ads

test

அதிரடியாக குறைந்த தங்கத்தின் விலை.

 தங்கத்தை எவ்வளவுதான் நாம் வாங்கினாலும் இன்னும் வாங்க வேண்டும் என்ற எண்ணம் நமக்கு அதிகரித்துக் கொண்டேதான் இருக்கும்.

எல்லா மக்களும் விரும்பிவாங்கும் உலோகமாக தற்போது தங்கம் மாறியுள்ளது. அப்படிப்பட்ட தங்கத்தின் விலை தொடர் உயர்வில் இருப்பது மக்களை கவலை கொள்ள வைத்திருந்தது.

இந்த நிலையில், சென்னையில் இன்று தங்கத்தின் விலை கிராமுக்கு 144 குறைந்தது மக்களுக்கு சந்தோசத்தை ஏற்படுத்தியுள்ளது.

 தங்கத்தின் விலை இன்று காலை நிலவரப்படி சவரனுக்கு 144 ரூபாய் குறைந்து ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.36,112-க்கு விற்பனையாகிறது. இன்று கிராமுக்கு 18 ரூபாய் குறைந்து, ரூ.4,514-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஒரு கிலோ வெள்ளியின் விலை நேற்று மாலை 65,600 ரூபாயாக இருந்த நிலையில், இன்று காலையில் வெள்ளியின் விலை கிலோவுக்கு எந்த மாற்றமில்லாமல் ரூ.65,600-க்கு விற்பனை செய்யப்படுவதுடன் ஒரு கிராம் வெள்ளி ரூ.65.60-க்கு விற்பனை செய்யப்படுகிறது.


No comments