Header Ads

test

ஆரம்பப் பாடசாலைகளுக்கு விடுமுறை விடுமுறை இரத்து.

 க.பொ.த உயர்தரப் பரீட்சையின் போது ஆரம்பப் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்குவது தொடர்பான அறிவிப்பை கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது.

2021ம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை எதிர்வரும் 07ம் திகதி முதல் மார்ச் மாதம் 05ம் திகதி வரை நடைபெறும் என கல்வி அமைச்சின் பாடசாலை விவகார மேலதிகச் செயலாளர் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், அந்த காலப்பகுதியில் ஆரம்ப பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட மாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில் பரீட்சை காலத்தில் ஆரம்ப தரம் மற்றும் ஆரம்ப பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட மாட்டாது.

பரீட்சை சூழலை பேணுவதற்கு இடையூறான பாடசாலையாக இருந்தால் சம்பந்தப்பட்ட அதிபர்கள் வலயக் கல்விப் பணிப்பாளர்கள் ஊடாக மாகாண கல்விப் பணிப்பாளர்களுக்கு அறிவிக்க வேண்டும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

அவ்வாறான பாடசாலைகளின் ஆரம்ப தரங்களுக்கு விடுமுறை வழங்குவதற்கும், குறித்த பாடசாலைகளுக்கு உரிய பணியிடங்களை பரிந்துரைப்பதற்கும், கற்றல் முறைகளை மேற்கொள்வதற்கும் உள்ளூராட்சி கல்விப் பணிப்பாளர்களுக்கு அதிகாரம் வழங்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பரீட்சை கடமைகளுக்காக நியமிக்கப்பட்டுள்ள ஆசிரியர்களை பணியமர்த்துமாறு அனைத்து பாடசாலைகளின் அதிபர்கள், வலய மற்றும் மாகாண கல்விப் பணிப்பாளர்களுக்கும் கல்வி அமைச்சு பணிப்புரை விடுத்துள்ளது.


No comments