பல்கலைக்கழக மாணவி ஒருவர் பரிதாபகரமாக யாழ் போதனா வைத்தியசாலையில் மரணம்.
காய்ச்சல் காரணமாக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சப்ரகமுவா பல்கலைக்கழக மாணவி பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.
இணுவில் மேற்கை சேர்ந்த 23 வயதான சிவகரநாதன் திவாகரி என்ற மாணவியே இவ்வாறு உயிரிழந்துளார்.
மேலும், குறித்த மாணவி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது பெறப்பட்ட குருதி மாதிரியை பரிசோதனைக்கு உட்படுத்தி டெங்கு காரணமாக உயிரிழந்தாரா என்பது தொடர்பில் கண்டறியுமாறு பணிக்கப்பட்டது.
காய்ச்சல் காரணமாக நேற்று முன்தினம் (30-02-2022) ஞாயிற்றுக்கிழமை அவர் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இருப்பினும் குறித்த மாணவி திங்கட்கிழமை (31-01-2022) காலை சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் யாழ்.போதனா வைத்தியசாலை திடீர் இறப்பு விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் இறப்பு விசாரணைகளை முன்னெடுத்தார். சடலம் உடற்கூற்றுப் பரிசோதனையின் பின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
Post a Comment