Header Ads

test

சற்று முன்னர் யாழில் ஏற்பட்ட பதற்ற நிலை.

 சட்டவிரோதமாக யாழ்.வடமராட்சி, சக்கோட்டை கடற்பரப்பில் நுழைந்த மூன்று இந்திய படகுகளை யாழ்.கடற்கரை பகுதியில் வைத்து சற்றுமுன்னர் கைப்பற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதேவேளை, இந்திய மீனவர்களுக்கும், இலங்கை மீனவர்களுக்கும் இடையில் ஏற்பட்ட மோதலில் இந்திய மீனவர்களினால் பெற்றோல் குண்டு வீச்சு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், வடமராட்சி பகுதியில் இருந்து சென்ற ஒருவருக்கு காயம் ஏற்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், இலங்கை கடற்படையினரால் மாதகல் கடற்பரப்பில் எல்லை தாண்டிய மீன்பிடியில் ஈடுபட்ட இரண்டு இந்திய இழுவை படகுகளும், வடமராட்சி கடலில் மீனவர்களால் சுற்றிவளைக்கப்பட்ட ஒரு படகு உட்ப்ட மூன்று இந்திய இழுவை படகுகளை கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இச் சம்பவத்தின் போது சுப்பர் மடம் பகுதியில் மக்கள் ஒன்றிக்கூடியுள்ளமையினால் குறித்த பகுதியில் சற்று அமைதியின்மை நிலவிவருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, எல்லை தாண்டிய இந்திய மீனவர்கள் இலங்கை மீனவர்களின் இழுவை மடி படகுகளை வெட்டி சேதப்படுத்தி தப்பிச்சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும் இச் சம்பவத்தின் போது கைப்பற்றப்பட்ட படகுகளை இலங்கை கடற்படை அதிகாரிகள் கொண்டுச்சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.



No comments