Header Ads

test

7வது மாடியிலிருந்து விழுந்து உயிரிழந்த சிறுவனின் மரணம் தொடர்பில் வெளிவந்த அதிர்ச்சித் தகவல்.

 கொழும்பு - பம்பலப்பிட்டி பகுதியில் தொடர்மாடி குடியிருப்பு ஒன்றில் இருந்து வீழ்ந்து உயிரிழந்த 15 வயது சிறுவனின் பிரேத பரிசோதனை அறிக்கை வெளியாகியுள்ளது.

இதன்படி, குறித்த சிறுவன் ஐஸ் போதைப்பொருள் பயன்படுத்தியிருந்ததாக பிரேத பரிசோதனையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த சிறுவன் கடந்த 28ம் திகதி பம்பலப்பிட்டி பகுதியில் உள்ள தொடர்மாடி குடியிருப்பின் 7வது மாடியிலிருந்து விழுந்து உயிரிழந்தார்.

இந்நிலையில், சம்பவ இடத்திற்கு வந்த நீதவான் சிலானி பெரேராவின் உத்தரவின் பேரில் சட்டத்துறை வைத்திய அதிகாரி விசேட வைத்தியர் ராகுல் ஹக்கினால் பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

பிரேத பரிசோதனை கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரேத அறையில் நடைபெற்றது. சிறுவன் உயிரிழந்த தினத்தன்று பெற்றோர் வீட்டில் இல்லை என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

குறித்த சிறுவன் கடந்த 28ம் திகதி வெள்ளிக்கிழமை மதியம் 2.30 மணியளவில் பாடசாலை முடிந்து வீடு திரும்பியதாகவும், அன்றைய தினம் பிரத்தியேக வகுப்புகள் இடம்பெறாது என சிறுவன் தனது தாயிடம் தொலைபேசி ஊடாக கூறியுள்ளார்.

இதேவேளை, குறித்த தொடர்மாடி குடியிருப்பில் வசிக்கும் ஒருவர் அன்று மதியம் பலத்த சத்தம் கேட்டதாகவும், சிறுவன் தரையில் வீழந்து கிடப்பதைப் பார்த்ததாகவும் பொலிஸாரிடம் கூறியுள்ளார்.

சிசிடிவி காட்சிகள் மற்றும் ஆதாரங்களின் அடிப்படையில் சிறுவனின் மரணம் குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


No comments