Header Ads

test

சுதந்திர தினத்தை முன்னிட்டு197 கைதிகள் விடுதலை.

 சுதந்திர தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி பொது மன்னிப்பின் கீழ் 197 கைதிகள் விடுதலை செய்யப்படவுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நாளை (04) கொண்டாடப்படவுள்ள 74வது சுதந்திர தினத்தை முன்னிட்டு கைதிகளுக்கு விடுதலை வழங்கப்படவுள்ளதாக சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் சந்தன ஏக்கநாயக்க குறிப்பிட்டார்.

அதற்கமைய, மஹர சிறைச்சாலையில் 20 கைதிகளும் கேகாலை சிறைச்சாலையில் 18 கைதிகளும் வெலிக்கடை சிறைச்சாலையில் 17 கைதிகளும் களுத்தறை சிறைச்சாலையில் 13 கைதிகளும் நாளை (04) விடுதலை செய்யப்படவுள்ளனர்.

போகம்பறை மற்றும் மட்டக்களப்பு சிறைச்சாலைகளிலிருந்து தலா 11 கைதிகளும் வாரியபொல சிறைச்சாலையிலிருந்து 10 கைதிகளும் ஜனாதிபதி பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்படவுள்ளனர்.  

இதேவேளை, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு சுதந்திர தினத்தன்று ஜனாதிபதியின் பொது மன்னிப்பு கிடைக்கும் என தாம் உறுதியாக நம்புவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

இன்று காலை ரஞ்சன் ராமநாயக்கவை சந்தித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த சஜித் பிரேமதாச, மனிதாபிமான அடிப்படையில் ராமநாயக்கவுக்கு நாளை மன்னிப்பு வழங்குமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்தார்.

ரஞ்சன் ராமநாயக்க தனது சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளை பொதுமக்களுக்கு வழங்குவதன் மூலம் பொதுமக்களுக்கு சேவை செய்ததால் அவர் விடுவிக்கப்படுவார் என்று நம்புகிறோம் என்று எதிர்க்கட்சித் தலைவர் கூறினார்.

சுதந்திர தினத்தை முன்னிட்டு நாளை பொதுமன்னிப்பு வழங்குவதற்கான பட்டியல்கள் தங்களின் அறிவின்படி இணங்கப்பட்டுள்ளதாக சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். 



No comments