கடற்படை சிப்பாய் ஒருவர் எடுத்த விபரீத முடிவு.
திருகோணமலை தலைமையக கடற்படை முகாமில் தூக்கில் தொங்கிய நிலையில் கடற்படை சிப்பாய் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இன்று (19) அதிகாலை தூக்கில் தொங்கிய நிலையில் கடற்படை சிப்பாய் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இவ்வாறு மீட்கப்பட்ட கடற்படை சிப்பாய் நவ வத்தேகம பிரதேசத்தைச் சேர்ந்த என்.எம்.கே.எஸ்.நவரத்ன (வயது26) என தெரியவந்துள்ளது.
மேலும் கடற்படை சிப்பாய் தூக்கில் தொங்கி இவ்வாறு தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை.
திருகோணமலை கடற்படை முகாம் வைத்தியசாலையிலிருந்து திருகோணமலை பொது வைத்தியசாலைக்குப் பிரேதப் பரிசோதனைக்காகச் சடலம் கொண்டு செல்லப்பட உள்ளத்துடன், மேலதிக விசாரணைகளைத் திருகோணமலை துறைமுக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
Post a Comment