Header Ads

test

வவுனியா பொது வைத்தியசாலைக்குள் வாள் வெட்டு.

வவுனியா பொது வைத்தியசாலைக்குள் சென்ற வாள் வெட்டுக்குழுவினர் பதுங்கியிருந்து நபர் ஒருவரை இலக்கு வைத்து தாக்க முற்பட்டபோது பாதுகாப்பு கடமையிலிருந்த பாதுகாப்பு ஊழியர்கள் மற்றும் பொலிஸார் இணைந்து அங்கு இடம் பெறவிருந்த வாள் வெட்டுச்சம்பவத்தை தடுத்துள்ளனர்.

வவுனியா பொது வைத்தியசாலைக்குள் இன்று (16) பிற்பகல் நோயாளர்களை பார்வையிடும் உறவினர்கள் என உள் நுழைய முற்பட்ட சிலர் அங்கு பார்வையாளர்கள் காத்திருக்கும் பகுதியில் தங்கியிருந்துள்ளனர்.

எனினும் பாஸ் நடைமுறை காரணமாக உள் நுழைய முடியாமல் வெளியே நீண்ட நேரம் காத்திருந்துள்ளனர்.

வைத்தியசாலை விடுதியிலிருந்து வெளியே வந்த நபர் ஒருவர் மீது மறைந்திருந்து குறித்த குழுவினர் தாக்க முற்பட்டபோது பாதுகாப்பு ஊழியர்கள் விரைந்து செயற்பட்டதால் வாள் வெட்டுக்குழுவினரின் முயற்சி பிசுபிசுத்துள்ளது.

வெளியே காத்திருந்த வாள் வெட்டுக்குழுவினர் வைத்தியசாலை பொலிஸாரின் வருகையுடன் அங்கிருந்து தப்பி சென்றுவிட்டதாகவும் வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

வைத்தியசாலைக்கு வந்த குழுவினர் இன்று காலை அண்ணாநகர் பகுதியில் இடம்பெற்ற அடிபாட்டு சம்பவம் ஒன்றுடன் தொடர்புபட்ட நபர்களைத் தேடி வைத்தியசாலைக்கு சென்றதாகவும், சம்பவம் குறித்து பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் மேலும் தெரியவருகின்றது.   


No comments