Header Ads

test

காதலித்த இளைஞன் திருமணம் செய்ய மறுத்ததால் யுவதி ஒருவர் எடுத்த தவறான முடிவு.

 காதலித்த இளைஞன் திருமணம் செய்ய மறுத்ததாக தெரிவித்து யுவதி ஒருவர் நஞ்சு மருந்து அருந்திய நிலையில் வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

குறித்த சம்பவம் நேற்றைய தினம் இடம்பெற்றிருந்தது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், தாய், தந்தையரை இழந்த நிலையில் வவுனியாவில் உள்ள சிறுவர் இல்லம் ஒன்றில் வசித்து வந்த 23 வயது யுவதி ஒருவரை அவரது உறவினரான பெண் ஒருவர் தன்னுடன் அழைத்து சென்று வைத்திருந்துள்ளார்.

இதனையடுத்து வவுனியாவில் உள்ள ஆடைத் தொழிற்சாலை ஒன்றில் வேலைக்கு சேர்ந்த குறித்த யுவதி மதவுவைத்தகுளம் பகுதியில் வாடகை வீடு ஒன்றில் தனிமையில் தங்கியிருந்துள்ளார்.

இதன்போது தொலைபேசி மூலம் அறிமுகமாகிய வவுனியா, புதுக்குளம் பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய இளைஞனுடன் 2 வருடங்களாக காதல் தொடர்பில் குறித்த யுவதி இருந்துள்ளார்.

இதனையடுத்து இளைஞனை திருமணம் செய்யுமாறு யுவதி கோரியபோது அவர் அதற்கு மறுப்பு தெரிவித்ததுடன், தான் பிறிதொரு பெண்ணை பதிவுத் திருமணம் செய்து விட்டதாக யுவதியிடம் கூறியுள்ளார்.

இதனால் விரக்தியடைந்து விபரீத முடிவெடுத்த யுவதி நஞ்சருந்தியதாக கூறப்படும் நிலையில் வவுனியா பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.


No comments