கிளிநொச்சி பளையில் அம்மன் ஆலயமொன்றிலுள்ள வேப்பமரத்தில் பால் வடியும் அதிசயம்.
கிளிநொச்சி பளை பகுதியில் உள்ள அம்மன் ஆலய சூழலில் அமைந்துள்ள வேப்பரத்திலிருந்து பால் வடிவதாக கூறப்படுகின்றது. அரத்தி நகர் வரலாற்று ஆலயமான அரத்தி அம்மன் ஆலயத்தில் வேப்பமரத்தில் இருந்தே இவ்வாறு பால் வடிவதாக கூறப்படுகின்றது.
இதேவேளை கடந்த காலத்தில் இதேபோன்று வற்றாப்பளை கண்ணகை அம்மன் ஆலய சூழலில் அமைந்திருந்த வேப்பமரத்திலிருந்து பால் சொரிந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் அதே காட்சி தற்போது இவ் ஆலயத்திலும் நிகழ்ந்துள்ள நிலையில் அதனை பார்ப்பதற்காக அங்கு மக்கள் கூட்டம் படையெடுத்துவருவதாக கூறப்படுகின்றது.
அதேவேளை நன்கு முற்றிய வேம்பில் இருந்து பால் வடிவது இயற்கையான ஒன்றாகும் . அதோடு இது ஒருவகை கள்ளு சுவையுடன், அதே கள்ளு மணத்துடன் இருக்கும் என கூறப்படுவதுடன் இதனை மருந்துக்காக பயன்படுத்துவார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Post a Comment