இலங்கையில் ஒமிக்ரோன் தொற்றை பரப்பிய பெண்ணுக்கு நீதி மன்றம் வழங்கிய தண்டனை.
இலங்கையில் ஒமிக்ரோன் மாறுபாட்டினால் பாதிக்கப்பட்ட நிலையில் அடையாளம் காணப்பட்ட முதலாவது பெண்ணுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
மாரவில பிரதேசத்தை சேர்ந்த பெண் மற்றும் அவரது கணவருக்கு நீதிமன்றம் அபராதம் விதித்துள்ளது. கோவிட் தொற்றியுள்ளமை குறித்து அறிவிக்காத குற்றச்சாட்டின் கீழ் மாரவில நீதிமன்றத்தினால் 12 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இந்த தம்பதி கடந்த மாதம் 5ஆம் திகதி தென்னாபிரிக்கா நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டு இலங்கைக்கு வருகைத்தந்துள்ளனர்.
அத்துடன் குறித்த இருவரும் கோவிட் தடுப்பூசி பெற்றுக் கொள்ளாமல் வெளிநாட்டு பயணங்கள் மேற்கொண்டுள்ளமையும் தெரியவந்துள்ளது.
Post a Comment