கொழும்பு அதிவேக வீதியில் இடம்பெற்ற கோர விபத்தில் இருவர் உயிரிழப்பு.
கொழும்பு அதிவேக வீதியின் கடுவல - கடவத்த பகுதியில் இன்று (29) காலை இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இரு பார ஊர்திகள் ஒன்றுடன் ஒன்று மோதியதில் இவ்விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர்.
Post a Comment