உள்ளூர் துப்பாக்கியுடன் பிரதேச சபை ஊழியர் கைது.
திருகோணமலை மொரவெவ பகுதியில் 1உள்ளூரில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியொன்றை தம் வசம் வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் சந்தேக நபரொருவரை கைது செய்துள்ளதாக மொரவெவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இச் சம்பவம் நேற்றிரவு (16) இடம்பெற்றுள்ளது. இவ்வாறு கைது செய்யப்பட்டவர் அதே பகுதியைச் சேர்ந்த மொரவெவ பிரதேச சபை ஊழியர் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
உள்ளூரில் உற்பத்தி செய்யப்பட்ட துப்பாக்கியொன்றை மறைத்து வைத்திருப்பதாக பொலிஸாருக்கு வழங்கப்பட்ட இரகசிய தகவலையடுத்து குறித்த சந்தேக நபர் சேனை காவலுக்காக சென்ற போது அவரை பின் தொடர்ந்து அவர் தங்கியிருந்த குடிசையை சோதனையிட்ட போது மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் துப்பாக்கி மீட்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபரை திருகோணமலை நீதவான் qமுன்னிலையில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் மொரவெவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
Post a Comment