கிணற்றில் தவறி விழுந்த சிறுமி பரிதாபகரமாக உயிரிழப்பு.
கரணவாய், அண்ணா சிலையடிப் பகுதியில் சிறுமியொருவர் கிணற்றில் தவறி விழுந்து பரிதாபகரமாக உயிரிழந்த சம்பவமொன்று பதிவாகியுள்ளது.
இச்சம்பவம் நேற்று (18) மாலை 6.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
இச் சம்பவத்தில் 16 வயதான ஜெகன் கஜனிகா என்ற சிறுமியே உயிரிழந்துள்ளார்.
குறித்த சிறுமி வீட்டில் வளர்க்கப்படும் ஆட்டிற்கு குழை வெட்டுவதற்காக கிணற்றுக்கட்டில் ஏறி நின்று பூவரசம் குழை வெட்டிய போது அவர் கிணற்றில் தவறி விழுந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இதனையடுத்து அவர் மீட்கப்பட்டு பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார். இச் சம்பவம் தொடர்பில் நெல்லியடிப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Post a Comment