Header Ads

test

வவுனியாவில் காணாமல் போன உயர்தர மாணவி தொடர்பில் வெளிவந்த தகவல்.

 வவுனியாவில் உயர்தர மாணவி ஒருவர் காணாமல் போயுள்ளதாக கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டையடுத்து அது தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக வவுனியா பொலிசார் நேற்று (12) தெரிவித்துள்ளனர்.

வவுனியா, மகாறம்பைக்குளம் பகுதியில் வசித்து வரும் 18 வயதுடைய உயர்தர வகுப்பு மாணவி ஒருவர் தனியார் வகுப்புக்கு சென்று வீடு திரும்பிய நிலையில் கடந்த வியாழக்கிழமை காணாமல் போயுள்ளதாக பெற்றோரால் வவுனியா பொலிசில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

குறித்த முறைப்பட்டையடுத்து விசாரணைகள் இடம்பெற்று வருவதுடன், குறித்த மாணவி தொடர்பில் தகவல் தெரிந்தோர் அருகில் உள்ள பொலிஸ் நிலையத்தில் அல்லது 0774935652, 0772432257, 0772608819 ஆகிய தொலைபேசி இலங்களுக்கு அறியத்தருமாறும் பெற்றோர் கோரியுள்ளனர்.

கொழும்பில் பணிபுரியும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரின் மகளாகிய குறித்த மாணவி வவுனியா நகரப் பகுதியில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றில் உயர்தரம் கற்று வந்தமை குறிப்பிடத்தக்கது.


No comments