முல்லைத்தீவில் சடலமாக மீட்கப்பட்ட இராணுவ வீரர்.
முல்லைத்தீவு பகுதியில் இராணுவ வீரர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் இடம்பெற்றுள்ளது.
அதன்படி தங்கூசி நூலால் தூக்கில் தொங்கிய நிலையில் குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
திருமுறுகண்டி பகுதியில் அமைந்துள்ள 11ஆவது இயந்திர காலால் படைப்பிரிவின் பணியாற்றும் காலி ஸ்ரீ ஹிக்கடுவ பகுதியைச் சேர்ந்த இராணுவ வீரரே, இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இவர் தற்கொலை செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
Post a Comment