Header Ads

test

கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் ஏற்பட்டுள்ள பாரிய தீ விபத்து.

 கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் இன்றிரவு பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

இவ்வாறு ஏற்பட்ட தீப்பரவல் பிரதேச சபையின் தீயணைப்பு பிரிவினர் மற்றும் இராணுவத்தினரின் உதவியுடன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையின் ஒரு பகுதியிலேயே இவ்வாறு தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.

குறித்த தீ விபத்து கிளிநொச்சி வைத்தியசாலை பணிப்பாளர், இராணுவ உயர் அதிகாரிகள், கரைச்சி பிரதேச சபை தவிசாளர் உள்ளிட்டவர்களின் கண்காணிப்பில் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

தீ விபத்து ஏற்பட்டமைக்கான காரணங்கள் ஆராயப்பட்டு வரும் நிலையில் குறித்த விபத்தினால் பாரிய சேதம் ஏற்பட்டுள்ளது. ஆனாலும் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.








No comments