Header Ads

test

தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள பாரிய மாற்றம்.

 உலகில் பல நாடுகளில் கோவிட் தொற்று பரவல் ஆரம்பித்ததை தொடர்ந்து தங்கத்தின் விலையிலும் தொடர்ச்சியாக அதிகரித்து வருகின்றது.

கோவிட் வைரஸ் பரவலால் சர்வதேச பங்குச் சந்தையில் நிலையற்ற தன்மை காணப்படுவதுடன் உலகப் பொருளாதாரமும் சரிவைச் சந்தித்து வருகின்றது.

இந்நிலையில், தங்கத்தின் விலையானது நீண்டகால நோக்கில் மேலும் அதிகரிக்கலாம் என்று நிபுணர்கள் கணித்து வருகின்றனர். 

இதற்கமைய, தங்கத்தின் விலையானது அடுத்த 12 - 15 மாதங்களில் உச்சம் தொடலாம் என நிபுணர்கள் கணித்துள்ளனர். 

இது குறித்து மோதிலால் ஆஸ்வால் நிறுவனத்தின் கணிப்பு படி அடுத்த 12 - 15 மாதங்களில் அவுன்ஸூக்கு 2000 டொலர்களுக்கு மேலாக அதிகரிக்கலாம் என கணிப்பிடப்பட்டுள்ளதுடன்,வரலாற்று உச்சத்தினை உடைக்கலாம் எனவும் கணித்துள்ளது. 


No comments