Header Ads

test

வடமராட்சி கிழக்கு கடலில் காணாமல் போன இரு மீனவர்களது சடலங்களும் சற்றுமுன்னர் மீட்பு.

வடமராட்சி கிழக்கு கடலில் காணாமல் போன இரு மீனவர்களது சடலங்களும் சற்றுமுன்னர் கரை ஒதுங்கியுள்ளது.

கடந்த வியாழக்கிழமை கடற்றொழிலிற்குச் சென்று காணாமல் போயிருந்த இரண்டு மீனவர்களது சடலங்களும் சற்றுமுன்னர் கரை ஒதுங்கியுள்ளது.

கடந்த நான்கு நாட்களாகக் காணாமல் போனவர்களைத் தேடும் பணி இடம் பெற்ற நிலையில் சற்று முன்னர் வடமராட்சி கிழக்கு ஆழியவளை கடற்கரையில் சடலங்கள் கரை ஒதுங்கியுள்ளன.

கரை ஒதுங்கியுள்ள சடலங்களைக் கிளிநொச்சி நீதிபதி முன்னிலையில் அடையாளம் காட்டப்பட்ட பின்னர் சடலங்களைக் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்குப் பிரேதப் பரிசோதனைக்காக ஒப்படைக்கப்பட்டு உறவினர்களிடம் கையளிக்கும் நடவடிக்கைகள் இடம் பெறுவதாக மருதங்கேணி பொலிஸ் நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.


No comments