Header Ads

test

முகமாலைப் பகுதியில் மீட்கப்பட்ட மனித எச்சம்.

 கிளிநொச்சி - பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முகமாலை பகுதியில் மனித நேய கண்ணிவெடி அகற்றும் பிரிவினரால் மனித எச்சம் ஒன்று அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.

முகமாலை பகுதியில் மனித நேய கண்ணிவெடி அகற்றும் பிரிவினரால் மனித எச்சம் ஒன்று அடையாளப்படுத்தப்பட்டமையைடுத்து பளை பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது.

இதனையடுத்து கிளிநொச்சி மாவட்ட நீதிமன்ற நீதவானுக்குத் தகவல் வழங்கப்பட்டமையையடுத்து குறித்த பகுதிக்கு இன்று (19)வருகை தந்த கிளிநொச்சி மாவட்ட நீதவான் குறித்த பகுதியைப் பார்வையிட்டிருந்தார்.

இதனையடுத்து நீதவானின் அனுமதியுடன் இன்று குறித்த பகுதியில் மேலும் அடையாளப்படுத்தப்பட்ட இடங்களில் அகழ்வு பணிகள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.





No comments