Header Ads

test

நாட்டில் அதிகரித்துள்ள கொவிட் மரணங்களின் எண்ணிக்கை.

 இலங்கையில் மேலும் 24 கொவிட் மரணங்கள் நேற்றைய தினம்(01) பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

அதன்படி, நாட்டில் பதிவான கொவிட் மரணங்களின் மொத்த எண்ணிக்கை 15,019 ஆக அதிகரித்துள்ளதுடன், மரணித்தோரின் மொத்த எண்ணிக்கை 15,000ஐ கடந்துள்ளது.

இதேவேளை, கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 224 பேர் இன்று குணமடைந்துள்ளனர்.

இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 560,949 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


No comments