Header Ads

test

திடீரென அதிகரித்த சீமெந்தின் விலை.

 சீமெந்து பொதியின் விலையை இன்று(01) முதல் அதிகரிக்க உள்நாட்டு சீமெந்து நிறுவனங்கள் தீர்மானித்துள்ளன.

50 கிலோ சீமெந்து பொதியொன்றின் விலையை 100 ரூபாவினால் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதன்படி சீமெந்து பொதியொன்றின் புதிய விலை 1,375 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனினும். தற்போது இறக்குமதி செய்யப்படும் சீமெந்து பொதியின் விலையானது,

உள்ளுர் சீமெந்து பொதியின் விலையை விடவும் 100 ரூபா அதிகமாகும். அதன்படி இறக்குமதி செய்யப்படும் சீமெந்து பொதியின் விலை 1,475 ரூபாவாக உள்ளமை குறிப்பிடத்தக்கது. 


No comments