மனைவி மற்றும் மாமியாரை வாளால் வெட்டிய நபர் தீயில் எரியுண்டு மரணம்.
மனைவி மற்றும் மாமியாருடன் ஏற்பட்ட பிரச்சினையில், அவர்களை வாளால் வெட்டியதன் பின்னர் குறித்த நபர் தீயில் எரியுண்டு உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்பவத்தில் நான்கு பிள்ளைகளின் தந்தை ஒருவரே இவ்வாறு தீயில் எரியுண்டு உயிரிழந்ததாக மொனராகலை மஹகளுகொல்ல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தீக்காயங்களுடன் மொனராகலை வைத்தியசாலையில் நேற்றிரவு அனுமதிக்கப்பட்ட இந்த நபர் இன்று காலை உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது.
Post a Comment