வவுனியாவில் இளைஞன் மாயம் - உதவி கோரும் குடும்பம்.
வவுனியா - தேக்கவத்தை பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவரை கடந்த 4 நாட்களாக காணவில்லை என காவல் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
குறித்த இளைஞர் கடந்த 27 ஆம் திகதி வவுனியா குருமன்காடு பகுதிக்கு சென்று வருவதாக வீட்டில் கூறிவிட்டு மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார்.
எனினும் அதன் பின்னர் அவருடனான தொடர்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன. நான்கு நாட்கள் கடந்தும் குறித்த இளைஞர் வீட்டிற்கு வராத நிலையில், அவரது தாயாரால் வவுனியா காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
குறித்த சம்பவத்தில் பாலகிருஷ்ணன் நிரேஸ் வயது 30 என்ற இளைஞரே இவ்வாறு காணாமல்போயுள்ளதுடன், அவர் தொடர்பான தகவல் தெரிந்தவர்கள் 0778013692, 0771014446, என்ற இலக்கத்திற்கு அழைப்பினை ஏற்படுத்தி தெரியப்படுத்துமாறு அவர்களது குடும்பத்தினரால் கோரப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் வவுனியா காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
Post a Comment