வவுனியாவில் முச்சக்கரவண்டியும்,துவிச்சக்கரவண்டியும் நேருக்கு நேர் மோதி விபத்து.
வவுனியா - குருமன்காடு பகுதியில் முச்சக்கரவண்டியும்,துவிச்சக்கரவண்டியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில், பெண் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நேற்று மாலை 6.30 மணியளவில் இடம்பெற்ற இவ்விபத்து சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
குருமன்காடு பகுதியில் இருந்து துவிச்சக்கர வண்டியில் வந்த பெண் ஒருவர் காளி கோவிலடி வீதிக்குத் திரும்பிய போது மன்னார் வீதி வழியாக வந்த முச்சக்கரவண்டி துவிச்சக்கரவண்டியுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
குறித்த விபத்து காரணமாக துவிச்சக்கர வண்டியில் பயணித்த பெண் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
விபத்து தொடர்பில் வவுனியா போக்குவரத்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
Post a Comment