Header Ads

test

பரீட்சைகள் திணைக்களம் விடுத்துள்ள அறிவித்தல்.

 2021 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் விரைவில் வெளியிடப்படவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

பரீட்சையின் பெறுபேறுகள் 1 மாதம் மற்றும் 10 நாட்களுக்குள் முடிவுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுவதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி. தர்மசேன தெரிவித்துள்ளது.

இதேவேளை, 2021 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை கடந்த 22 ஆம் திகதி இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.


No comments