Header Ads

test

அடுக்குமாடியிலிருந்து குதித்த முதியவர் பரிதாபகரமாக உயிரிழப்பு.

 கொழும்பில் உள்ள அடுக்கு மாடி கட்டிடத்தில் இருந்து குதித்து முதியவர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நேற்று மாலை சனிக்கிழமை (15-01-2022) வௌ்ளவத்தை பகுதியில் உள்ள கட்டிடம் ஒன்றின் 7 ஆவது மாடியில் இருந்து, குறித்த முதியவர் குதித்துள்ளதாக வௌ்ளவத்தை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் 87 வயதான முதியவர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இவ்விபத்தில் பலத்த காயமடைந்த முதியவர் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அவருக்கு ஏற்பட்ட மனவேதனை காரணமாக அவர் இவ்வாறு தற்கொலை செய்துகொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை வௌ்ளவத்தை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


No comments