சிஐடி என கூறி கொள்ளையில் ஈடுபட்ட நால்வரை மடக்கிப்பிடித்த பொலிஸார்.
மட்டக்களப்பு வெல்லாவெளி பிரதேசத்தில் பொலிஸ் சிஐடி என கூறி கடந்த 5 ஆம் திகதி வீடொன்றுக்குள் நுழைந்த கொள்ளையர்கள், கணவரை கட்டிவைத்துவிட்டு அவரின் மனைவியிடமிருந்து பெறுமதியான பொருட்களை அபகரித்து சென்றுள்ளனர்.
காதில் இருந்த தோடுகள், தங்க சங்கிலி உட்பட இரண்டரை பவுண் தங்க நகைகளை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். அவ்வாறு கொள்ளையில் ஈடுபட்ட 6 பேரை நேற்று கைது செய்துள்ளதுடன் கார் ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கொள்ளையடிப்பதற்காக, பயன்படுத்திய கோடரி ,கத்தி 3 கையடக்க தொலைபேசிகள் என்பவற்றை மீட்டுள்ளதாக மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு பி.எஸ்.பி பண்டார தெரிவித்தார்.
சம்பவம் தொடர்பில் ஓட்டுமாவடி, கிரான் பிரதேச செயலக பிரிவிலுள்ள வட்டவான் மற்றும் வெல்லாவெளி பிரதேசத்தைச் சேர்ந்த 4 பேரையே பொலிஸார் கைது செய்தனர்.
கைதானவர்கள் 31,34,29 மற்றும் 31 வயதுடையவர்கள் என்றும், இவர்கள் கடந்த காலத்தில் குற்றச் செயல் காரணமாக கைது செய்யப்பட்டு சிறைச்சாலையில் வைக்கப்பட்டிருந்த போது 4 பேரும் நண்பர்களாகி சிறையில் இருந்து வெளியில் வந்ததும் கொள்ளையடித்து வருவதுடன் அதற்காக காரொன்றையும் வாடகைக்கு அமர்த்தியுள்ளனர்.
கொள்ளையடித்த தங்க ஆபரணங்களை பினாஸ் கம்பனி ஒன்றில் ஒரு இலட்சத்து 91 ஆயிரம் ரூபாவுக்கு ஈடுவைத்து அந்த பணத்தை பங்கு கொண்டுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்நிலையில் கைதான 6 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
Post a Comment