Header Ads

test

தமிழ்க்குடில் ஒன்றியத்தின் நிதிப் பங்களிப்பில் அறிவூற்று கல்வி நிலையம் அங்குரார்ப்பணம்.

  நேற்றைய தினம்(15)தமிழ்க்குடில் ஒன்றியத்தின் ஊடாக யேர்மனியின் பிறேமன் மானிலத்தில் வாழும் உறவுகளின் நிதிப் பங்களிப்பில் திம்பிலி,கைவேலி-புதுக்குடியிருப்பு பகுதியில் சிறுவர்களுக்கான பாடசாலை ஒன்று உத்தியோகபூர்வமாக திறந்துவைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

யுத்தத்தால் பாதிக்கப்பட்டு அடிப்படை வசதிகளற்று காணப்படும் திம்பிலி கிராமத்திலுள்ள சிறார்களின் எதிர்கால நலன்களை கருத்திற்க்கொண்டு ஆண்டு 01 தொடக்கம் 05 வரையான மாணவர்களின் கற்றல் செயற்பாடுக்களுக்காக சுமார் 30 இலட்சம் ரூபா செலவில் குறித்த "அறிவூற்று" பாடசாலை நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

குறித்த பாடசாலை நிர்மாணிப்பதற்கான முழுமையான பங்களிப்பினை யேர்மனியின் பிறைமன் மானிலத்தில் வாழும் புலம்பெயர் தேசத்து உறவுகள் "தமிழ்க்குடில்" ஒன்றியத்தின் ஊடாக வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இப் பாடசாலையானது மாணவர்களின் கற்றல் செயற்பாடுகளுக்காக நேற்றைய(15) தினம் அறிவூற்று பாடசாலை நிர்வாகத்தினரிடம் வைபவ ரீதியாக கையளிக்கப்படமை குறிப்பிடத்தக்கது.

தமிழ்க்குடில் ஒன்றியத்தால் இதே பகுதியில் மரநடுகை செயற்றிட்டம் ஒன்று முன்னெடுக்கபட்டிருந்ததுடன், நிகழ்விவில் கலந்துகொண்ட அதிதிகளுக்கு நினைவுப் பரிசில்களும் வழங்கிவைக்கப்பட்டது.

இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் திரு.சிவராஜசிங்கம் ஜெயக்காந் அவர்களும் மற்றும் முல்லைத்தீவு வலயக் கல்வி உதவிப் பணிப்பாளர்,கிராம சேவையார் மற்றும் புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்தின் நிர்வாக அலுவலர் இதே போன்று குறித்த பாடாலையின் ஆசிரியர்கள் அப் பகுதி வாழ் மக்கள் தமிழ்க்குடில் கல்வி மேம்பாட்டகத்தின் அங்கத்வர்கள் என பலரும் கலந்துகொண்டு சிறப்பித்    திருந்தமை குறிப்பிடத்தக்கது.

அத்துடன் தமிழ்க்குடில் ஒன்றியத்தின் ஊடாக தாயக பகுதிகளில் அதிகளவான செயற்றிட்டங்கள் முன்னெடுத்து வருகின்றமை பாராட்டுக்குரியதொன்றாகும்.




























No comments