பாடசாலை மாணவர்களுக்கும் இராணுவத்தினருக்கும் இடையில் ஏற்பட்டுள்ள கடும் மோதல்.
மினுவாங்கொடை பகுதியில் இராணுவத்தை சேர்ந்த சிலருக்கும் பாடசாலை மாணவர்களிற்கும் இடையில் கடும் மோதல் இடம்பெற்றுள்ளது.
இவ்வாறு இடம்பெற்ற மோதலில் இராணுவத்தை சேர்ந்த மூவர் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கொழும்பிலுள்ள இராணுவ தலைமையகத்தில் தற்போது பணியாற்றும் வவுனியா பாதுகாப்பு படை தலைமையகத்தை சேர்ந்த மூன்று இராணுவத்தினர் மினுவாங்கொடையில் பாடசாலை மாணவர்கள் ஏழு பேருடன் மோதலில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த மோதலிற்கான காரணம் இதுவரை தெரியவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் பாடசாலை மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
Post a Comment