Header Ads

test

அரச உத்தியோகத்தர்கள் தொடர்பில் வடக்கு ஆளுநர் தெரிவித்த கருத்து.

 வடக்கில் இனி அரச உத்தியோகத்தர்கள் பொது மக்களின் குறை நிறைகளைக் கேட்டறியும் வேலைத்திட்டம் விரைவில் உருவாக்கப்படும் என வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா தெரிவித்துள்ளார்.

வடமாகாண ஆளுநர் செயலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர்களுடனான சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

வடமாகாண ஆளுநராக நான் கடமைகளைப் பொறுப்பேற்று மூன்று மாதங்களுக்கு மேலாகிறது. எனக்கு ஒவ்வொரு நாளும் 20க்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் கிடைக்கின்றன. சிலர் நேரிலும் வந்து என்னைச் சந்திக்கின்றார்கள்.

என்னைச் சந்திக்க வருபவர்கள் சிறுசிறு பிரச்சினைகளோடு வருகின்றார்கள். அந்தப் பிரச்சினைகள் அனைத்தும் சாதாரண மட்டப் பிரச்சினைகள் அதாவது கிராம சேவையாளர் மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர் ஊடாக தீர்க்கப்பட வேண்டிய விடயங்கள்.

ஆனால் அவர்களால் தீர்க்கப்படாதவிடத்து என்னிடம் வருகின்றார்கள். நான் என்னிடம் வருபவர்களைத் திருப்பி அனுப்ப முடியாது. அவர்களுக்கு உரிய தீர்வினைப் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கிறேன்.இதற்குப் பிறகு நான் ஒரு முடிவு எடுத்துள்ளேன்.

அதாவது அரச உத்தியோகத்தர்கள் இனிமேல் அலுவலகங்களில் மட்டும் கடமை புரியாது மக்களிடம் சென்று மக்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகளைத் தொடர்பில் ஆராய்ந்து எனக்கு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்ற வேலைத்திட்டத்தை விரைவில் ஆரம்பிக்க உள்ளேன் என தெரிவித்துள்ளார்.


No comments