Header Ads

test

இன்று யாழை சென்றடைந்த தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் வாகன பேரணி.

 13 ஆவது திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி முன்னெடுத்துள்ள வாகன பேரணி இன்று யாழ்ப்பாணத்தை வந்தடைந்தது.

குறித்த வாகனப்பேரணியானது இன்று காலை கிளிநொச்சியிலிருந்து ஆரம்பமாகி யாழ்ப்பாணத்தை வந்தடைந்துள்ளது.

இதன்போது தமிழர்களின் அரசியல் அபிலாசைகளை 13ம் திருத்தத்திற்குள் முடக்கும் சதி முயற்சியை முறியடிக்க அனைத்து தமிழ் மக்களதும் பூரணமான ஆதரவைக் கோரி துண்டு பிரசுரங்களும் வழங்கப்பட்டது.

வாகனப்பேரணியில் நாடாளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராசா கஜேந்திரன், சட்டத்தரணிகளான ந.காண்டீபன், க.சுகாஸ், உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் கட்சியின் ஆதரவாளர்கள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Gallery Gallery Gallery Gallery Gallery

No comments