Header Ads

test

இலங்கையில் விபத்துக்குள்ளான விமானம் தொடர்பில் மறைக்கப்பட்ட பல உண்மைகள்.

 சக்குராய் எவியேஷன் நிறுவனத்திற்குச் சொந்தமான சிறிய ரக விமானம் ஒன்று கடந்த 27ஆம் திகதி இரத்மலானையில் இருந்து சீகிரியா நோக்கிச் சென்ற நிலையில் விபத்துக்குள்ளானது. விமானம் அவசர தரையிறக்கம் மேற்கொண்டாக கூறப்பட்டது.

எனினும் விமான கட்டுநாயக்க விமான    நிலையில் தரையிறங்கும் சந்தர்ப்பத்தில் கட்டுப்பாட்டை இழந்து உடைந்து விழுந்ததென விமானியிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

கடந்த 27ஆம் திகதி மௌகால் என்ற 40 வயதுடையவரும், மாரிய மௌஷல்யா என்ற 29 வயதுடைய லெபனான் நாட்டு தேனிலவு தம்பதியை சீகிரியவில் இருந்து கொக்கலவுக்கு சென்ற நிலையில் திடீர் விபத்துக்குள்ளாகி வயல் பகுதியில் உடைந்து விழுந்துள்ளது. எனினும் விமானம் பயணத்தை ஆரம்பித்து சிறிது நேரத்தில் தனது கட்டுப்பாட்டை இழந்துள்ளதாக தெரியவந்தமையினால் கட்டுப்பாட்டு பிரிவிற்கு அறிவித்து திடீர் தரையிறக்கத்திற்கு அனுமதி பெற்றதாக விமானத்தின் பிரதான விமானி திமுது ருவன்பத்திரன பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

வழங்கப்பட்டுள்ள ஆலோசனைக்கமைய கட்டுநாயக்க விமான நிலைய ஓடுபாதையில் தரையிறங்குவதற்காக அந்த பகுதி நோக்கி பயணிக்கும் போது விமானம் கட்டுப்பாட்டை இழந்து உடைந்து விழுந்துள்ளது.

கட்டுப்பாட்டை இழந்தமைக்கான காரணம் தனக்கு தெரியாதெனவும், அது தொழில்நுட்ப கோளாரினால் ஏற்பட்டதென தான் நம்புவதாகவும் விமானி குறிப்பிட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். எப்படியிருப்பினும் விமானி மற்றும் விமான நிறுவனம் சில விடயங்களை மறைப்பதற்கு முயற்சிப்பது தெரியவந்துள்ளதென விசாரணை மேற்கொண்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

விமானி பல விடயங்களை மறைத்துள்ளதாக தெரியவந்துள்ளது. சிவில் விமான சேவை பிரிவினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் பல விடயங்கள் தெரியவந்துள்ளதென பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


No comments