வவுனியாவில் மீட்கப்பட்ட ஒரு தொகுதி ஆயுதங்கள்.
வவுனியா பரசங்குளம் காட்டுப்பகுதியில் மோட்டார் குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன.
இவ் மீட்பு நடவடிக்கைகள் நேற்று (17) இடம்பெற்றுள்ளது.
இராணுவ புலனாய்வாளர்களுக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், புளியங்குளம் பொலிஸாருடன் இணைந்து பரசங்குளம் காட்டுப்பகுதியில் மேற்கொண்ட தேடுதலின் போதே குறித்த குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன.
இதன்போது ஆர்பிஜி ரக குண்டு 01, 60 மில்லிமீற்றர் மோட்டார் குண்டு 03ம் மீட்கப்பட்டது.
மீட்கப்பட்ட குண்டுகளை செயலிழக்க செய்யும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை புளியங்குளம் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
Post a Comment