கட்டுநாயக்க விமான நிலையத்தில் வெளிநாட்டவர் ஒருவரால் பரபரப்பு.
கட்டுநாயக்க விமான நிலையத்தில் வெளிநாட்டவர் ஒருவரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து தப்பிச் சென்ற வெளிநாட்டவர் ஒருவர் இலங்கை விமானப்படை கொமாண்டோக்கள், விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த வெளிநாட்டவர் போலி கடவுசீட்டு மூலம் அபுதாபி ஊடாக பிரான்ஸின் பாரிஸிற்கு செல்ல முயற்சித்துள்ளார். எனினும் அவர் எந்த நாட்டவர் என அடையாளம் காணப்படாத வெளிநாட்டவராகும்.
அவர் கட்டுநாயக்க விமான குடிவரவு குடியகல்வு திணைக்கள அதிகாரிகளினால் கைது செய்த போது திடீரென விமான நிலையத்தில் தப்பியோடி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
Post a Comment