Header Ads

test

தொடர்ந்தும் இருளில் மூழ்கப் போகும் இலங்கை - வெளிவந்த அதிர்ச்சித் தகவல்.

 நாட்டின் சில பகுதிகளில் இன்றும் மின்சாரம் தடைப்படும் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

நாளாந்த மின்சார தேவையை பூர்த்தி செய்வதில் உள்ள சிரமங்கள் மற்றும் மின் உற்பத்தி நிலைய அமைப்பின் செயலிழப்புகள் காரணமாக இந்த மின் தடை ஏற்படக்கூடும் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

இதேவேளை, நேற்றிரவு கொழும்பு உட்பட பல பகுதிகளில் மின்சார விநியோகம் பல முறை தடைப்பட்டது.

களனிதிஸ்ஸ அனல்மின் நிலையத்தில் உள்ள ஜெனரேட்டரில் ஏற்பட்ட கோளாறு காரணமாக மின்சார விநியோகம் தடைப்பட்டுள்ளது.

இரவு 9.30 மணியளவில் மின்சாரம் வழமைக்குத் திரும்பியதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

எப்படியிருப்பினும் களனிதிஸ்ஸ அனல்மின் நிலையத்தின் அமைப்பு செயற்பாடுகளை தொடர்ந்தும் கண்காணித்து வருவதாக இலங்கை மின்சார சபை மேலும் தெரிவித்துள்ளது.


No comments