இலங்கையில் மீண்டும் உக்கிரமடைந்துள்ள கொவிட் மரணங்கள்.
இலங்கையில் மேலும் 21 கொவிட் மரணங்கள் நேற்று (30) பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
இதற்கமைய, நாட்டில் இதுவரையில் கொவிட்-19 தொற்றினால் மரணித்தோரின் மொத்த எண்ணிக்கை 15,441 ஆக உயர்வடைந்துள்ளது.
இதேவேளை, கொவிட் தொற்று உறுதியான மேலும் 1,082 பேர் இன்று இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதற்கமைய, நாட்டில் கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 611,185 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment