வீதி ஓரத்தில் சடலமாக மீட்கப்பட்ட முச்சக்கர வண்டி சாரதி.
மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பார்வீதியில் இன்று காலை முச்சக்கர வண்டி சாரதியொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதுடன் சேதமடைந்த நிலையில் முச்சக்கர வண்டியும் மீட்கப்பட்டுள்ளது.
இன்று அதிகாலை கறுவப்பங்கேணியிலிருந்து மட்டக்களப்பு புகையிரத நிலையத்திற்கு பயணிகளை ஏற்றுவதற்காக சென்றவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையிலிருந்து தெரியவருகின்றது.
சடலமாக மீட்கப்பட்டவர் கறுவப்பங்கேணி,நாவலர் வீதியை சேர்ந்த 49வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையான மாசிலாமணி தர்மரட்னம் என அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
பொதுமக்கள் வழங்கிய தகவல்களின் அடிப்படையில் குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளதுடன் இது தொடர்பிலான விசாரணைகளை மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் முன்னெடுத்துவருகின்றனர்.
Post a Comment