Header Ads

test

வவுனியாவில் கையும் களவுமாக பிடிபட்ட திருடன்.

 வவுனியாவில் உள்ள  ஆடை விற்பனை நிலையங்களில் ஆடைகளை திருடியதாக சந்தேகிக்கப்படும் நபர் ஒருவர் இளைஞர்களால் நையப்புடைக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் நேற்று சனிக்கிழமை (08-01-2022) இரவு இடம்பெற்றுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

வவுனியா - தர்மலிங்கம் வீதியில் இருக்கும் விற்பனை நிலையம் ஒன்றில் குறித்த நபர் ஆடைகளை திருடியபோது கையும் மெய்யுமாக சிக்கியுள்ளார்.

குறித்த நபரை சுற்றிவளைத்த இளைஞர்கள் நையப்புடைத்ததுடன், பொலிஸாருக்கும் தகவல் தெரிவித்தனர், சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் குறித்த நபரை கைது செய்து பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச்சென்றனர்.

மேலும், வாழ்க்கைச் செலவு அதிகரித்துள்ள நிலையில், வவுனியாவில் கடந்த சில நாட்களாக திருட்டு சம்பவங்கள் தொடர்ச்சியாக பதிவாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


No comments