Header Ads

test

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவித்தல்.

 கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கு விசேட அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பரீட்சைக்காக விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் மேலும் நீடிக்கப்படுவதாக இலங்கை பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

இதன்படி எதிர்வரும் பெப்ரவரி மாதம் 3ம் திகதி வரையில் விண்ணப்பம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதேவேளை, பரீட்சை சான்றிதழ் வழங்கும் ஒரு நாள் சேவை இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 24ம் திகதி முதல் கால வரையறையின்றி இந்த சேவை இடைநிறுத்தப்படும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.


No comments