Header Ads

test

நீர் தேக்கம் ஒன்றிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்பு.

 ஹட்டன் நகருக்கு குடிநீரை விநியோகிக்கும் ஹட்டன் சிங்கிமலை நீர் தேக்கத்தில் மிதந்துக்கொண்டிருந்த ஆணின் சடலம் ஒன்றை இன்று மீட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அருகில் உள்ள காட்டில் விறகு உடைக்க சென்ற ஒருவர், நீர் தேக்கத்தில் சடலம் மிதப்பதை கண்டு, அது குறித்து ஹட்டன் பொலிஸாருக்கு அறிவித்துள்ளார்.

இதனையடுத்து அங்கு சென்ற பொலிஸார் சடலத்தை மீட்டுள்ளனர். சடலமாக மீட்கப்பட்ட நபர் இதுவரை அடையாளம் காணப்படவில்லை.

குறித்த நீர் தேக்கத்தில் அப் பிரதேசத்தில் வாழ்பவர்கள் குளிப்பது வழக்கம் என்பதுடன் அருகில் உள்ள தேயிலை தோட்டத் தொழிலாளர்கள் மீன்பிடியிலும் ஈடுபட்டு வருகின்றனர். 

 நீர் தேக்கத்தில் மீட்கப்பட்ட சடலம் தொடர்பில் ஹட்டன் பொலிஸார் மேலதிக விசாரணைகளை நடத்தி வருகின்றனர். 




No comments