வெளிநாடொன்றிருந்து அனுப்பப்பட் பொதிக்குள் சிக்கிய மர்மப் பொருள்.
நெதர்லாந்தில் இருந்து இலங்கைக்கு அனுப்பப்பட்டிருந்த 26 மில்லியனுக்கும் அதிக பெறுமதியுடைய போதை வில்லைகளை சுங்கத்திணைக்களத்தின் போதைப்பொருள் ஒழிப்புப்பிரிவு கைப்பற்றியுள்ளது.
கொழும்பு மத்திய தபால் பரிமாற்றகத்தை சென்றடைந்துள்ள பரிசுப்பொதியொன்றில் இருந்து குறித்த போதை வில்லைகள் நேற்று (15.01.22) கண்டுபிடிக்கப்பட்டதாக சுங்க ஊடகப்பேச்சாளர், பிரதி சுங்கப் பணிப்பாளர் சுதந்த சில்வா தெரிவித்துள்ளார்.
படுக்கை விரிப்புக்கள் மற்றும் விளையாட்டுப் பொருட்கள் என தெரிவித்து அனுப்பப்பட்டுள்ள குறித்த பொதி யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஒருவருக்கு விலாசமிடப்பட்டுள்ளது.
காட்போட் பெட்டியொன்றுக்குள் 01 கிலோ 600 கிராம் நிறையுடைய 4,000 போதை வில்லைகள் மிக சூட்சுமமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக சுங்க ஊடகப்பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.
குறித்த பரிசுப்பொதியைப் பெற்றுக்கொள்வதற்காக கொழும்பு மத்திய தபால் பரிமாற்றகத்துக்கு சென்றிருந்த வௌ்ளவத்தையைச் சேர்ந்த 30 வயதுடைய ஒருவர் சுங்க அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் போதை வில்லைகளுடன் மேலதிக விசாரணைகளுக்காக காவற்துறை போதைப்பொருள் ஒழிப்புப்பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக சுங்க ஊடகப் பேச்சாளர் பிரதி சுங்கப் பணிப்பாளர் சுதந்த சில்வா மேலும் தெரிவித்துள்ளார்.
Post a Comment