வவுனியாவில் காணமல் போன பிள்ளையார் சிலை.
வவுனியா - இலுப்பையடி பகுதியில் காணப்பட்ட பிள்ளையார் சிலை மாயமாகியுள்ளது.
இலுப்பையடிப் பகுதியில் உள்ள இலுப்பை மரத்தின் கீழ் சிறிய கூடாரம் அமைக்கப்பட்டு பிள்ளையார் சிலை வைத்து வழிபடப்பட்டு வந்தது.
வவுனியா நகரின் இலுப்பையடிப் பகுதியில் உள்ள வர்த்தகர்கள், முச்சக்கரவண்டி சாரதிகள், அப்பகுதியால் பயணத்தில் ஈடுபடும் மக்கள் எனப் பலராலும் வழிபடப்பட்டு வந்த பிள்ளையார் சிலையே மாயமாகியுள்ளது.
இனந்தெரியாத நபர்கள் குறித்த சிலையை அங்கிருந்து அகற்றியுள்ளதுடன், சிலை இருந்த இடம் வெறுமையாகக் காட்சியளிக்கின்றது.
Post a Comment